1. Home
  2. தமிழ்நாடு

26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி !

26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி !


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொவிட் 19 பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், நலிவடைந்துள்ள தொழில்துறையை மீண்டும் வகையில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், திருப்பூர், நாமக்கல், கோவை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 26 திட்டங்கள் மூலம் 25 ஆயிரத்து 213 கோடி தொழில் முதலீடுகள் கிடைக்கும் என்றும், 49 ஆயிரத்து 33 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like