1. Home
  2. தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் சிறப்பு.. 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்தன..

அரசு மருத்துவமனையில் சிறப்பு.. 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்தன..


தமிழகத்தில் மற்ற காலங்களை விட கொரோனா காலத்தில் அதிக பிரசவம் நடந்துள்ளதாகவும், அதிகப்படியான பெண்கள் கருவுற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மகப்பேறு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தினமும் 50 முதல் 55 குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய அரசு மருத்துவமனையின் இயக்குநர் விஜயா, மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் 43 ஆண் குழந்தைகள், 21 பெண் குழந்தைகள் என மொத்தம் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம், 40 சதவீதம் சிசேரியன். 4 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தாய்மார்களும், குழந்தைகளும் நலமுடன் உள்ளனர் என மகிழ்ச்சியாக கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like