இனி அரசு ஊழியர்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில் பணி செய்யலாம்..! எங்கு தெரியுமா ?

இந்தியாவை தவிர பிற நாடுகளில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குவைத் நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது விருப்பத்திற்கு தகுந்தாற்போல வேலைநேரத்தை மாற்றம் செய்துகொள்ளும்படியான சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை துவங்கிக்கொள்ளலாம். இதே போல, பிற்பகல் 1.30 முதல் 3.30 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை முடித்துவிட்டு கிளம்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, விருப்பத்திற்கு தகுந்த நேரத்தில் வேலை செய்வதால் ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கட்டாயமாக 7 மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்திருக்க வேண்டும். அரசின் இந்த புதிய உத்தரவால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசாங்க வேலையை தவிர வீட்டு வேலைகளையும் சரிவர முடித்துக்கொள்ளலாம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், அரசு ஊழியர்களின் விருப்பப்படியே இந்த அறிவிப்பை வெளியிட்டதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.