அரசு ஊழியர்கள் குஷி..! இந்த மாதத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை..!

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கோ ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் இப்போதே தொடங்கிவிட்டது. இதன் காரணமாக பகல் வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. அந்த வகையில் குளுமையான இடங்களுக்கு செல்ல தற்போதே பலரும் திட்டமிட்டு வருகிறார்கள்.
எனவே கோடை விடுமுறைக்கு முன் கூட்டியே ஊட்டி, கொடைக்கானல் செல்ல தயாராகி வருகிறார்கள். எனவே சனி மற்றும் ஞாயிறு விடுமுறையோடு சேர்த்து தொடர்ந்து விடுமுறை வருமா என அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் காத்துள்ளனர்.
அந்த வகையில் வருகிற மார்ச் 29ஆம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. அதன் படி மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31ஆம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசு விடுமுறையானது அளிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி கணக்கு முடிவு அரசு விடுமுறை நாளாகும். எனவே தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.