அரசு மருத்துவர்கள் சாதனை..! சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய LED பல்பின் பாகம்..!
சேர்ந்த அருண் கணேஷ் என்பவரது மூன்று வயது மகன் இவான். இந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக சிறிய எல்இடி பல்பை விழுங்கியுள்ளார். அந்த எல்இடி பல்ப் சிறுவனின் மூச்சு குழாயில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிறுவனின் மூச்சு குழாயில் சிக்கிய எல்இடி பல்பை எடுக்க முடியாத நிலையில், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுன்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலையில், காது மூக்கு தொண்டை நிபுணர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மூச்சு குழாயில் சிக்கி இருந்த எல்இடி பல்பை அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள் செய்தி குறிப்பில், “ மூன்று வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய சிறு பல்பை திருநெல்வேலி காது, மூக்கு தொண்டை பிரிவில் உள்ள மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
சிறுவனின் வலது மூச்சுக்குழாயில் (RT Bronchus) அடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால், அவனுக்கு நவீன அறுவை சிகிச்சை அரங்கத்தில் வைத்து, காது மூக்கு தொண்டை துறை மருத்துவர்கள் அதிவிரைவாக செயல்பட்டு, 20 நிமிடத்தில் வலது மூச்சுக்குழாயில் Rigid Bronchoscopy எனும் நவீன சிகிச்சை மூலம் பல்பு அகற்றப்பட்டது.
.png)