மீண்டும் சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து... நீந்திச்சென்று மீட்ட தீயணைப்பு துறையினர்..!
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு முதல் பெய்த கோவை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து சிக்கியது. ரத்தினபுரி சங்கனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் நேற்று தனியார் பேருந்து சிக்கிய நிலையில், இன்று அரசு பேருந்து சிக்கியது. அரசுப் பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து... நீந்திச்சென்று பேருந்தில் பயணித்தவர்களை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு துறையினர்..#Coimbatore | #GovtBus | #Floods | #HeavyRain | #Rescue | #PolimerNews pic.twitter.com/HDR55Mko8M
— Polimer News (@polimernews) October 14, 2024