கோவையில் சரக்கு லாரி மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 20 பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது அந்த பேருந்து, சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விபத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சியில், அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருப்பதும், அதற்கு முன்பு வலதுபுறம் மற்றொரு சாலையிலிருந்து ஒரு லாரி திரும்பி செல்வதும், அந்த லாரியை பின் தொடர்ந்து மற்றொரு லாரியானது வேகமாக வந்து அரசு பேருந்து மீது மோதுவதும், மோதிய வேகத்தில் அந்த அரசு பேருந்து ஆனது இடதுபுறமாக சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் வழிகாட்டி பலகை மீது கவிழ்ந்து விழுந்ததும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த விபத்து நடப்பதற்கு முன்பு வெள்ளை நிற கார் ஒன்று விபத்தில் சிக்காமல் நொடிப்பொழுதில் தப்பித்ததும் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இன்று காலை பேருந்து மீது லாரி மோதி விபத்து. 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்.#Coimbatore #BusAccident #cctv pic.twitter.com/P1npwTkloK
— Noble Reegan J (@Reeganjnr) December 27, 2021