1. Home
  2. தமிழ்நாடு

அரசு பேருந்து மீது மின் கம்பி உரசி அரசு பேருந்து ஓட்டுனர் உடல் கருகி பலி...!

1

கோத்தகிரி  கூட்டாடா கிராமத்திலிருந்து இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று கோத்தகிரி நோக்கி சென்றது. இந்தப் பேருந்தை  ஓட்டுனர் 40வயதான பிரதீப்  இயக்கி சென்றுள்ளார். அப்போது கோவில்மட்டம் அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருக்கும் போது சாலையில் தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகள் மீது பேருந்து உரசியது. இதில்   மின்சாரம் பாய்ந்ததில் பேருந்து ஓட்டுனர்  சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இதனை அறிந்த நடத்துனர் உடனடியாக காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தார்.   இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின் இணைப்பை துண்டித்து ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் காற்றுடன் கூடிய பெய்து வரும் மழை காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர். இந்நிலையில் அரசு பேருந்து மீது மின்சாரம் தாக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like