1. Home
  2. தமிழ்நாடு

தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து..அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

Q

பொள்ளாச்சியிலிருந்து கோவைக்குச் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வந்தபோது, பேருந்திலிருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்டதும் சுதாரித்துக் கொண்ட டிரைவர் உடனடியாகப் பேருந்தை நிறுத்தினார்.
பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். இதையடுத்து பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் உடனடியாகப் பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like