1. Home
  2. தமிழ்நாடு

சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு திரும்பிய பள்ளி மாணவனுக்கு எமனாக வந்த அரசு பேருந்து..!

1

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் சுஜாதா. இவர், அணு மின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஷரவன் (9) என்ற மகன் இருந்தான். இவர் அணுசக்தி மத்திய பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

Accident

இந்த நிலையில் சுதந்திர நாள் நிகழ்ச்சியையொட்டி சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவன் விழா முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மாணவன் ஷரவன் மீது மோதியது.

இதில் ஷரவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் வந்த சகமாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்பாக்கம் போலீசார் மாணவன் ஷரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Kalpakkam

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த கல்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையை கடக்க முயன்ற 4-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like