1. Home
  2. தமிழ்நாடு

வரும் 20-ந்தேதி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்..!

1

அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுநிலை பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம்  இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. மாணவர்கள் www.tngasa.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, வருகிற 11-ந்தேதி சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவு கலந்தாய்வு, வருகிற 13-ந்தேதி முதல் தொடங்கும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 20-ந்தேதி தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like