1. Home
  2. தமிழ்நாடு

தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும்..!

1

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று காலை வழக்குகளை விசாரிக்க இருந்தார். அப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியிடம் முறையிட்டார். மேலும், தேசிய கொடி ஏற்றப் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டித் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் எனவும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like