1. Home
  2. தமிழ்நாடு

இனி கள்ளச் சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்: காவல்துறை..!

1

கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளச் சாராயத் தயாரிப்பு, விற்பனை, கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் குண்டர் சட்டத்தில் ஓராண்டுக்கு கைது செய்யப்படுவர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள், ஏழு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்படும் என்றும் மதுவிலக்கு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்‌ சதுர்வேதி கூறியுள்ளார்.

இதற்கிடையே, கடந்த இரு நாள்களில் மட்டும் கல்வராயன்மலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 64 பேர் மீது 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1,864 லிட்டர் கள்ளச் சாராயம், இருநூறுக்கும் மேற்பட்ட மதுப்புட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர்.

Trending News

Latest News

You May Like