1. Home
  2. தமிழ்நாடு

ட்விட்டருக்கு (X) போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட "கூ" செயலி நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு..!

1

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்.. பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் இடையிலான போட்டி மிக தீவிரம் ஆகி உள்ளது. பல்வேறு துறைகளில் இவர்கள் மிக மோசமாக போட்டியிட்டு வரும் நிலையில்தான் மார்க் ஜுக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய சமூக வலைத்தளம் ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில், ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள 'கூ' 'koo' ஆப் பிரபலமாகி வருகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கிரிக்கெட்டர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பல பிரபலங்கள் 'கூ' சமூகவலைதளத்தில் இணைந்துள்ளனர். இதேபோல் அரசாங்கத் துறைகளும் ட்விட்டருக்கு மாற்றாக 'கூ' சமூகவலைதளத்தை பயன்படுத்தத் தொடங்கின.

இந்நிலையில் ட்விட்டருக்கு (X) போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைத்தளம் Koo. போதிய வரவேற்பு இல்லாததால் இந்த செயலியை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருக்கிறார்கள். DailyHunt உட்பட பிற நிறுவனங்களுடன் இணைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி அடைந்ததால் செயலியை நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like