1. Home
  2. தமிழ்நாடு

சந்திரயான் 3 சாதனை - டூடுலை வெளியிட்டு கொண்டாடிய கூகுள்..!

1

பிரபலங்களின் பிறந்தநாளின் போது அல்லது ஏதேனும் முக்கியமான நாட்களின் போது கூகுள் நிறுவனம், அழகான டூடுள்களை வெளியிடுவது வழக்கம். 

இந்நிலையில் இந்தியாவின் ‘சந்திரயான் 3’ வெற்றியை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் தனது லோகோவை மாற்றி டூடுல் வெளியிட்டுள்ளது.

 ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று மாலை 5.44 மணி அளவில் சந்திரயான் 3-ன் கடைசி கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது.

இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது.  அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்”  என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது.

இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சரித்திர சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ‘சந்திரயான்-3’ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது. அதற்காக ஒரு டூடுல் வெளியிட்டு இந்தியாவின் கொண்டாட்டத்தில் பங்கேற்றுக்கொண்டது கூகுள் நிறுவனம்.


 


 

Trending News

Latest News

You May Like