கூகிள் பே வாடிக்கையாளர்கள் ஷாக்..! இனி ரூ.100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் சேவை கட்டணம் வசூல்..!
பெரிய பெரிய மால்களில் இருந்து தெருவோர கடைகள் வரை எல்லா பக்கமும் இப்போது ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் UPI முறையை பெரும்பாலான மக்கள் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் ATMல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க படுவதே ஆகும்.கியூஆர் கோடு ஸ்கேனர் இல்லாத மளிகைக் கடைகளே இல்லை.
இந்நிலையில் கூகுள் பே (Google Pay) செயலியில் ரீசார்ஜ் செய்யும் போது கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
Google Pay Convenience Fee கட்டண விபரங்கள்:
- 100 ரூபாய் வரை - எந்த கட்டணமும் இல்லை.
- ரூ.100 முதல் ரூ.200 வரை - ஒரு.1., கட்டணமாக வசூலிக்கப்படும்.
- ரூ.201 முதல் ரூ.300 வரை - ரூ.2., கட்டணமாக வசூலிக்கப்படும்
- ரூ.301 - அதற்கு மேல் - ரூ.3., கட்டணமாக வசூலிக்கப்படும்.

இப்போது, Google Pay நிறுவனம் இந்த Convenience Fee கட்டணத்தை வெறும் மொபைல் ரீசார்ஜ்-க்கு மட்டுமே வசூலித்து வருகிறது. மற்றபடி பொதுவாக நபர்களுக்கு அல்லது கடைகளுக்கு செய்யப்படும் பண பரிவர்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
மற்றபடி நண்பர்களுக்கு அல்லது கடைகளுக்குச் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. அதேசமயம் போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் கூட Platform Fee எனும் பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.