பெண்கள் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட 'கூகுள்'..!

இன்று (மார்ச் 08) சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதை கார்டூன் மூலம் எடுத்துரைக்கிறது. விண்வெளி துறையில் பெண்கள் சிறந்து விளங்குவதையும் டூடுல் விளக்குகிறது.
தலைவர்கள் வாழ்த்து
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
பிரதமர் மோடி
மகளிர் தினத்தன்று நமது பெண் சக்திக்கு தலைவணங்குகிறேன். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி, நமது அரசு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது.
இன்று, வாக்குறுதியளித்தபடி, பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களால் எனது சமூக பக்கம் ஒப்படைக்கப்படும்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல்
பெண்கள் நமது சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். பெண்களின் வலிமை மற்றும் உறுதிப்பாடு நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இந்த சர்வதேச மகளிர் தினத்தில், ஒவ்வொரு பெண்ணும் தனது கனவை அடைய, அனைத்து தடைகளையும் உடைக்க உங்களுக்காக நான் துணை நிற்பேன்
முதல்வர் ஸ்டாலின்
உலக மகளிர் தின வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், 'வணக்கம், நல்லா இருக்கீங்களா, மாதம் தோறும் ஒரு கோடியே 14 லட்சம் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமை தொகைகள் பெறுகிறார்கள். தமிழக மாணவ, மாணவிகள் அப்பா அப்பா என்று வாய் நிறைய அழைக்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.