1. Home
  2. தமிழ்நாடு

இன்று 22ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும் கூகுள் !!

இன்று 22ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும் கூகுள் !!


பிரபல தேடுதளமான(Search Engine) கூகுள், தனது 22-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆராய்ச்சி மாணவர்களான வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் என்ற நண்பர்கள் முயற்சியில் உருவானது கூகுள். தங்களுடைய ப்ராஜெக்ட்டாக ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள்.

ஆனால் அந்த ப்ராஜெக்ட் இன்று இணையதள உலகில் பிரபலமான சர்ச் இன்ஜினாக வளர்த்து நிற்கிறது. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.

2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள்.

மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், 24 பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டுவதை கூகுள் தனது தேடுதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று தனது பிறந்த நாளையே டூடுலாக வைத்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like