1. Home
  2. தமிழ்நாடு

சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு..! விரைவில் நல்ல செய்தி வருகிறது..!

1

இந்திய ரிசர்வ் வங்கி ( RBI ) மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி நடந்தால் இந்த 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகக் குறையும். ஜூன் மாத பணவீக்க விகிதத்தில் சமீபத்திய குறைப்பைக் கருத்தில் கொண்டு அடுத்த இரண்டு நாணயக் கொள்கை குழு கூட்டங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்ற ரிசர்வ் வங்கி முடிவு செய்யலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

HSBC குளோபல் ரிசர்ச் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாத நாணயகக் கொள்கைக் கூட்டங்களில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், டிசம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI) அடிப்படையிலான பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் 2.1 சதவீதமாக இருந்தது. இது 2025 மே மாதத்தில் 2.8 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக இந்த பணவீக்கம் சரிந்துள்ளது. அது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சராசரி பணவீக்கம் 2.7 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இது ரிசர்வ் வங்கியின் 2.9 சதவீத மதிப்பீட்டை விடக் குறைவுதான்.

செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதம் குறித்துப் பேசியுள்ளார். அதில், பணவீக்கம் குறைவதும் வளர்ச்சி மந்தநிலையும் ரெப்போ வட்டி விகிதக் குறைப்புக்கு சமமான காரணம் என்று அவர் கூறினார். அதாவது, நாணயக் கொள்கைக் குழுவின் அடுத்த கூட்டங்களில் ரெப்போ விகிதம் குறித்து எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அது பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்து இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது. அதன் பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.00 சதவீதமாகக் குறைந்தது. அதன் பிறகு, ஜூன் மாதத்தில் 0.50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டது. அதன் பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.00 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

இதுபோன்ற சூழலில் அடுத்து வரும் நாணயக் கொள்கைக் கூட்டங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களும் குறையும். இது புதிதாக வீடு கட்ட நினைப்போருக்கும் வீடு வாங்க நினைப்போருக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like