மக்களுக்கு குட் நியூஸ்..! நாளை உங்கள் வங்கியில் பணம் வந்து சேரும்..!
இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ₹1000 பெறும் நிலையில், இத்திட்டத்தில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட 1.48 லட்சம் மகளிருக்கு ஜூலை 15 முதல் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது புதிதாக விண்ணப்பம் செய்யபவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்பு இவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம். வேறு சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக நாளை.. அதாவது ஜூலை 13ம் தேதி 1 ரூபாய் அனுப்பி டெஸ்ட் செய்யப்பட உள்ளது.