மக்களே குட் நியூஸ்..! இன்று மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்கலாம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக, இரு அணி வீரர்களும் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியைப் பிரபலப்படுத்தும் வகையிலும், கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காகவும் இன்று (அக்.08) மட்டும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டைக் காண்பித்து, மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் என்றும், இன்று (அக்.08) நள்ளிரவு 12.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த போட்டியை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளின் போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.