மக்களே குட் நியூஸ்..! சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் அறிவிப்பு..!

வருகிற 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்களும் தயாராகி வருகின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து வசதி இல்லாதது தான் பெரும் சிக்கலே.
ரயில்களிலும், அரசுப் பேருந்துகளிலும் முன்பதிவு எப்போதோ முடிந்துவிட்டது.இதனால் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகப்படியான மக்கள் செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் இந்த மார்க்கங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. சென்னை - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோயில், பெங்களூர் - நாகர்கோயில் ஆகிய சிறப்பு ரயில்கள் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது சிறப்பு வந்தே பாரத் ரயிலையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "வண்டி எண் 06067 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், எழும்பூரில் இருந்து வரும் 9-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கமாக, மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு இரவு 11.15-க்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.