1. Home
  2. தமிழ்நாடு

வெளியான குட் நியூஸ்! நவம்பர் 13ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை...!

1

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பிறப்பித்துள்ள உத்தரவில் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பொதுமக்கள் வருகை புரிவர்.

சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகள் இன்றி பலரும் வந்து வழிபட்டு செல்வர். இதையொட்டி நவம்பர் 13ஆம் தேதி அன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி அன்று வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பொதுமக்களின் நலன் கருதி அரசு சார்ந்த அவசர செயல்பாடுகளை கவனிக்கும் பொருட்டு கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறையின் பின்னணியை பொறுத்தவரை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட வீரன் வயல் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜாம்புவானோடை தர்கா பெரிய கந்தூரி விழா நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டு 03-11-2024 முதல் 16-11-2024 வரை 14 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெகு விமர்சையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமான நிகழ்வு நடைபெறும் 13ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Trending News

Latest News

You May Like