குட் நியூஸ்! இனி மின்சார கட்டணத்தை ஒரே நிமிஷத்துல கட்டலாம்!
இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தொற்றுநோய் பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நேரங்களில் வீடுகளில் முடங்கியுள்ளனர். மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. இந்த வகையில் தற்போது டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் (Paytm) மூலம் ஒரு நிமிடத்தில் ஆன்லைன் மின்சார கட்டணத்தை செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சேவை தளம் மூலமாக மின்சார கட்டணம் மட்டுமல்ல குடிநீர், எரிவாயு குழாய் இணைப்புகள், கிரெடிட் கார்டுகள் (Credit Cards) மற்றும் கேபிள் TV சேவைகளுக்கான கட்டணங்களும் செலுத்தலாம்.
இதற்கு Paytm பயன்பாட்டில் நுழைந்து கட்டண ரீசார்ஜ் மற்றும் கட்டண பில்களை செலக்ட செய்யவும். இதில் POWER விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, மாநில வாரியம் அல்லது அபார்ட்மெண்ட் பெயர் போன்ற அடிப்படை தகவல்களை நிரப்பவும்.
Paytm UPI, Paytm Wallet, Card மற்றும் Net Bank போன்ற விருப்பமான கட்டண முறையைப் பயன்படுத்தி பரிவர்த்தனையைத் தொடரலாம். வாடிக்கையாளர்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் 24X7 வாடிக்கையாளர் சேவை மையம் செயல்படுகிறது. களைத் தொடர்பு கொள்ளலாம்.
நகரங்களில் செயல்படுத்தப்படும் ஃபாஸ்டாக், சல்லன், மெட்ரோ டிக்கெட், டோல் பேமென்ட்ஸ், கடன்கள், டிஜிட்டல் தங்கம், கிரெடிட் கார்டுகள், டெபாசிட் மற்றும் காப்பீடு உள்ளிட்ட நிதி சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
newstm.in