குட் நியூஸ் .. இனி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் உங்க ட்ரிப்பை கேன்சல் பண்ண முடியாது

சென்னையில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளை தவிர்க்கும் விதமாகவும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் விதமாகவும் பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.
சென்னையில் அதிகமானவர்கள் தினந்தோறும் வாடகை ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை போக்குவரத்து கழக காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகின்றனர். ஆட்டோவை புக் செய்தால் செல்ல வேண்டிய இடத்தை கேட்டு அதன் பிறகு தான் டிரைவர்கள் கேன்சல் செய்வார்கள். ஆனால் தற்போது டிரைவர்கள் நம்மை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டு அதன்பின் கேன்சல் செய்யும் வழக்கம் உள்ளது. இதனால் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமயங்களில் டிரைவர்கள் கேன்சல் செய்யும் டிரிப் காரணமாக பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலை கூட ஏற்படும். இந்த நிலையில்தான் சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் முதலில் ரைட் செய்ய ஒப்புக்கொண்டு அதன்பின் கேன்சல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பயணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.இதையடுத்து, சென்னையில் ஆட்டோ அல்லது டாக்சியை புக் செய்தபின் கேன்சல் செய்தால் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அபராதமானது சட்ட பிரிவு 178 3 பி சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புக் செய்து கேன்சல் செய்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிருத்தப்பட்டுள்ளது.
ஓலா, உபர் போன்ற நிறுவனங்களிடம் மக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில், அந்த புகார்களை கொண்டு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.