1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்... இனி காலி மது பாட்டில் கொடுத்தால் பணம் தரப்படும்..!

1

தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் மதுபானங்களை வாங்கும் மது பிரியர்கள குடித்துவிட்டு பாட்டிலை பொது வெளியே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற சூழ்நிலை உருவாக கூடாது என்பதற்காக தற்போது டாஸ்மாக் கடைகளில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மது பாட்டில்களில் 'க்யூஆர்' கோடு உள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டி மது விற்பனை செய்யப்படும். இவ்வாறு ஒட்டியுள்ள மது பாட்டில்களை, மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு, பாட்டில்களை உடைகாமல் மீண்டும் டாஸ்மாக் கடைகளில் திருப்பி தரவேண்டும். இவ்வாறு அவர்கள் தரும் முன் கூட்டியே அவர்கள் வழங்கிய, 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.ஆனால், அந்த பாட்டில்களை அவர்கள் வெளியில் எங்கேயாவது உடைத்து விட்டால்,அவர்கள் முன்கூட்டியே செலுத்தப்பட்ட, 10 ரூபாய் திருப்பி வழங்கப்பட மாட்டாது. .

Trending News

Latest News

You May Like