குட்நியூஸ்..ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சவரன் ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.8,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று தமிழ் புத்தாண்டு (14.04.2025) அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ. 69,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.