1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..!! 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..?

1

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது என கூறியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்ரோடு, குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்) 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையத்தில் சேர விரும்புவோர் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக இந்நிலையத்திற்கு வருகைபுரிந்து சேர்ந்துபயன்பெறலாம் அல்லது இந்நிலைய முதல்வரை நேரில் தொடர்புகொண்டும் மற்றும் தொலைபேசி இணைப்பு எண். 9499055764 என்ற எண்ணில் தொடர்புகொண்டும் சேர்க்கை குறித்த விபரம் அறிந்துகொள்ளலாம்.

திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்பிக்கப்படும் தொழிற்பிரிவுகள், படிப்பு காலம் மற்றும் கல்வித்தகுதி விவரம் வருமாறு:-

Information Communication Technology System Maintenance (NSQF) தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, Technician Power Electronics System (NSQF) –திறன் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இரண்டு ஆண்டுகள் படிப்பில் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Computer Operator and Programming Assistant (NSQF)-கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோக்கராமிங் அசிஸ்டண்ட், Desktop Publishing Operator (NSQF)- டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், Fashion Design & Technology (NSQF)- நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய ஓராண்டு படிப்புகளில் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Surface Ornamentation Techniques (Embroidery) NSQF- அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம், Sewing Technology (NSQF)- தையல் தொழில்நுட்பம் ஆகிய ஓராண்டு படிப்பில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவிகளுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். பயிற்சியில் சேர மகளிருக்கு உச்சக்கட்ட வயது வரம்பு இல்லை. விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபடக்கருவிகள் மற்றும் காலணிகள், இலவச பயண அட்டை, மத்திய அரசின் NCVT சான்றிதழ் வழங்கப்படும். தேவைப்படும் மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவும். 

Trending News

Latest News

You May Like