அரசு சொன்ன குட் நியூஸ்..! இனி வீடுகளுக்கே செல்லும் புதிய ரேஷன் கார்டு..!
தமிழகத்தில் இப்போது புதிய ரேஷன் கார்டு பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நகல் மின்னணு ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால், அந்த கார்டு அஞ்சல் துறை வழியாக பயனாளிகளின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், திமுக அரசு பொறுப்பேற்றதும் நகல் குடும்ப அட்டைகளை அஞ்சல்வழியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். அப்போது முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 9 லட்சத்து 5 ஆயிரத்து 916 நகல் மின்னணு குடும்ப அட்டைகள் அஞ்சல்துறை வழியாக பொதுமக்களின் வீடுகளுக்கே உணவுப் பொருள் வழங்கல் துறை அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
அதாவது, பொதுமக்கள் நகல் மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால், அந்த கார்டை வாங்க வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேரில் செல்ல தேவையில்லை. அரசு உங்களின் வீடுகளுக்கு அஞ்சல்துறை வழியாக நகல் மின்னணு குடும்ப அட்டையை (Ration Card) அனுப்பி வைத்துவிடும்.
நகல் மின்னணு குடும்ப அட்டை என்றால் என்ன? என்றால் உங்களின் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், அதேபோன்றதொரு கார்டு கேட்டு டிஎன்பிடிஎஸ் வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல்துறை அந்த மனுவை பரிசீலித்து நகல் மின்னணு குடும்ப அட்டையை வழங்கும்.