1. Home
  2. தமிழ்நாடு

ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்..! இனி யானை வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்..!

1

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின்பேரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் ஏ.ஐ தொழில்நுட்ப கேமரா மற்றும் ஒலிபெருக்கி அமைக்கும் திட்டத்தை தனியார் தொழில்நுட்ப வல்லுநருடன் சேர்ந்து வனத்துறையினர் குடியாத்தம் அருகே உள்ள காந்தி கணவாய் பகுதியில் தொடங்கி வைத்தனர்.

இந்த ஏஐ தொழில் நுட்ப கேமரா சிறுத்தை நடமாட்டத்தை பதிவு செய்வதுடன், தானாக ஒலி எழுப்பி எச்சரிக்கை எழுப்ப கூடியது. இவ்வாறு அந்த ஏஐ தொழில்நுட்ப கேமராகளின் உதவியோடு சிறுத்தை காட்டுக்குள் விரட்டப்பட உள்ளனர்.

இந்த தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராவை பொறுத்தும் நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுமக்கள் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரின் தகவல்களை மட்டும் தான் நம்ப வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் போலியான வீடியோக்களை நம்ப தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தான் இந்த தொழில்நுட்ப கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

இனி மக்கள் தைரியமாக வெளியில் வந்து அவர்களது வேலையை செய்யலாம். முழுநேரமும் வனத்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் வனவிலங்களின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் இருப்பார்கள். விரைவில் வேலூர் வனப்பகுதிகளில் உள்ள அனைத்த கிராமங்களிலும் இந்த ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலிபெருக்கி பொறுத்துவது குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Trending News

Latest News

You May Like