1. Home
  2. தமிழ்நாடு

வங்கி வெளியிட்ட குட் நியூஸ்..! இனி EMI பிரச்சினை குறையும்..!

1

கரூர் வைஸ்யா வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவ்வங்கி தனது EBLR (External Benchmark) விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதம் இதற்கு முன்பு 10.05 சதவீதத்தில் இருந்து தற்போது 9.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 19 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

EBLR வட்டி விகிதம் என்பது வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதம் ஆகும். இது வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்திற்கான அடிப்படையாகும். இந்த விகிதம் ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால் அந்தந்த வங்கிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு இல்லாமலேயே இந்த வட்டி விகிதத்தை வங்கிகளால் கூட்டவோ குறைக்கவோ முடியும்.இந்த வட்டி விகிதம் முன்பு 10.05 சதவீதம் இருந்தது. தற்போது இது 9.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதங்களால் அனைவரின் பெர்சனல் லோன், EMI கடன் போன்றவை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரூர் வைஸ்யா வங்கியில் கடன் வாங்கினோர்களின் சுமைகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EBLR விகிதங்கள் அனைத்து வகையான கடன்களுக்கும் பொருந்தாது. MCLR (நிதி அடிப்படையிலான கடன் விகிதம்) போன்ற பிற விகிதங்கள் சில கடன்களுக்கு பொருந்தும். அதனால்தான் இந்த முடிவைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கான EMI குறைக்கப்படலாம் அல்லது குறைக்கப்படாமலும் போகலாம்.

Trending News

Latest News

You May Like