1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..! இனி கொளுத்தும் வெயிலுக்கு குட்பை..!

1

 தமிழகத்தில் வெப்ப அலை வீசு வருகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் வெயில் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை மையமும் அந்தந்த மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தி வருகிறது.சிறு குழந்தைகளும் வயதானவர்களும் கூட புழுக்கத்தினால் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மே 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த வெயிலையே தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அடுத்து வரும் சில நாட்களில் தமிழகத்தின் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் பலத்த இடி மின்னலுடன் நல்ல மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கடும் வெயிலுக்குப் பிறகு, நீலகிரி, வேலூர்-சித்தூர் எல்லை, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் கூடலூர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இது ஒரு தொடக்கம்தான், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் உள்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

காற்றில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளதால், வெப்பநிலை அதிகமாக உணரப்படும் என்றும் தமிழகத்தின் உள்புறப் பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வேலூர், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெயில் கொளுத்தும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like