மகளிர் உரிமை தொகை பயனாளருக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்..!

கலைஞர் மகளிர் தொகை திட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் மாதம்தோறும் 15 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கலைஞர் உரிமை தொகை அதற்கு முன் கிடைக்குமா என்ற ஆவல் மக்களிடம் உள்ளது.
இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு உரிமைத் தொகையை முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.இந்த மாதம் 9 அல்லது 10 ஆம் தேதி பணம் வரவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில் கிட்டதட்ட 70 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
உங்களிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்யவும்.
உங்கள் கணவர், நீங்கள் அரசு வேலையில் இல்லை என்பதை உறுதி செய்யவும்.
உங்களிடம் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளதா என்பதை பார்க்கவும். திட்டத்தில் கொடுக்கப்பட்ட வரையறைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் என்றால் பணம் கிடைக்காது.
மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.
சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.