1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..! விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும்..!

Q

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, "நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் திமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு. கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும்" என்றார்.

Trending News

Latest News

You May Like