குட் நியூஸ் உங்களுக்கு..! ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் மேல் முறையீடு செய்துள்ளீர்களா ?

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் ரூபாய் 1000 உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர். முன்னதாக விண்ணப்பித்திருந்தவர்களில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு கால அவகாசம் குறித்த தகவல்கள் செய்திகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்ய தொடங்கப்பட்டுள்ளதாகவும், உரிமைத் தொகைக்கு தகுதியானவர்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி முதல் எஸ்எம்எஸ் வாயிலாக தகவல்கள் அனுப்பப்படும் என்றும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்கள் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.