1. Home
  2. தமிழ்நாடு

மகளிருக்கு குட் நியூஸ்..! கலைஞர் உரிமைத்தொகையை வரும் 10-ம் தேதிக்குள் வரவு வைக்க திட்டம்..!

1

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு மாதந்தோறும் 15-ம் தேதி ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், இந்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்கு முன்னதாக கிடைக்குமா? என்று இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பம் அளித்து பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களுக்கு வருகிற நவம்பர் 25-ம் தேதி முதல் அவர்களுடைய செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வங்கிக் கணக்குகளில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14-ம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில், இம்மாதம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளி செலவுகளைச் சமாளிக்கும் வகையில் முன்கூட்டியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் குடும்பத் தலைவிகள் இருந்து வருகின்றனர். எனவே, நவம்பர் மாதத்திற்கான தொகை தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே மகளிருக்கான உரிமைத் தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 10-ம் தேதிக்குள் பணத்தை வங்கிகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like