1. Home
  2. தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு குட் நியூஸ்..! வரும் 10-ம் தேதி முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

1

தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகளில்  மேலும் மூன்று புதிய ரக பீர் வகைகள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவம்பர் 10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் ஹண்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் கிடைக்கும். அதே போன்று, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங் களுக்கும் திட்டமிட்டு வரும் டிசம்பர் மாதம் முதல் மேலும் பல வெளிமாநில பீர்களும் விற்பனைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் எஸ்.என்.ஜே குழுமத்தின் பார்லி பீர் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லேஹர் பீர், கிங்ஃபிஷர், கிங்பிஃஷர் ஸ்டிராங், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்டிராங், எஸ்.என்.ஜே என கிட்டத்தட்ட 35 வகையான பீர் ரகங்கள் விற்பனைக்கு உள்ளன.

தினமும் 50 லட்சம் பெட்டிகள் வரை பீர் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. கோடைக்காலத்தில் பீர் விற்பனை 65 லட்சம் பெட்டிகளாக அதிகரிக்கிறது. தற்போது மேலும் புதிது புதிதாக பல ரகங்களில் பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்படுவதால்  பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like