யுபிஐ பயனர்களுக்கு நல்ல செய்தி..! ஆர்பிஐ வங்கி சார்பில் புதிய அறிவிப்பு..!
நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வியாபார நிமித்தங்களுக்காக யுபிஐ பேமெண்ட் வழிமுறையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கும் யுபிஐ பேமெண்ட் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களுக்கு தொகையை செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. UPI LITE ஆனது 2022 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது RBI வங்கி ஆனது UPI LITE e-mandate-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.
இது பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் நிர்ணயித்த வரம்புக்கு கீழே இருப்புத் தொகை சென்றால், UPI லைட் வாலட்களை தானாக நிரப்பிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.