தொலைக்காட்சி நேயர்களுக்கு குட் நியூஸ்..! ஜீ டிவியின் புத்தம் புதிய 2 புதிய சேனல்கள்..!
கர்நாடக மாநில இளைஞர்களை கவரும் வகையில் அவர்களுக்காக ஜீ பவர் என்ற புதிய சேனலும், இந்தியா முழுவதும் உள்ள வங்க மொழி பேசும் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜீ பங்களா சோனார் என்ற புதிய சேனலும் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஜீ பவர் சேனலானது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது. துணிச்சலான நகர்ப்புற கதைகள், அபிலாசை நிரம்பிய நிகழ்ச்சிகள் மற்றும் நவீன பார்வையுடனான உள்ளடக்கம் இதில் இடம்பெறும். கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களையும் அடையும் வகையில் பன்முக ஊடக பிரசாரத்துடன் இது தொடங்கப்படுகிறது. தொடக்க கட்டத்தில் ஐந்து புனைகதை தொடர்கள், ஒரு நிஜ நிகழ்ச்சி மற்றும் தினசரி திரைப்படங்களும், சில உலக தொலைக்காட்சி முன்னோட்டங்களும் இடம்பெறவுள்ளன.
இதே போன்று ஜீ பங்கலா சோனார் என்ற புதிய சேனலும் அறிமுகம் செய்யப்பட்டது. இது புனை கதைகள், நிஜ நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் புதிய வடிவங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கலப்பு டிவி சேனல். இந்த சேனலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இது ஆகஸ்ட் 2025ல் அதிகாரபூர்வமாக ஒளிபரப்பாகும்.
.png)