ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! இனி ரயில்களிலும் இருக்கையை தேர்வு செய்யலாம்..!

பேருந்து முதல் விமானம் வரை பயணம் செய்யும் பயணிகள் தங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களது இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மலிவான கட்டணம்.. பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணம் என்பதால் பயணிகள் பலரும் ரயில்களையே அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் பயணிக்க ரயில்தான் சிறந்த தேர்வாக இருக்கும். எனவே ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது பெரும் சவாலான ஒன்றாகவே பயணிகளுக்கு உள்ளது.
பண்டிகை நாட்களில் டிக்கெட் அவ்வளவு எளிதாக கிடைக்காது. தட்கல் டிக்கெட் புக் செய்தாலும் இதுதான் நிலைமை.. அப்படியே டிக்கெட் கிடைத்தாலும் கூட நமக்கு லோயர் பெர்த் கிடைக்குமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.. முதியவர்கள், பெண்கள் என பலரும் லோயர் பெர்த்தையே எதிர்பார்ப்பார்கள்.. டிக்கெட் புக் செய்யும் போது தேவைப்படும் பெர்த் முன்னுரிமை கோரலாம் என்றாலும் நாம் கேட்டது லோயர் பெர்த் அவ்வளவு எளிதாக கிடைக்காது.
ஆனால் தற்போது ரயில்வே நிர்வாகம் நீண்ட நாட்களாக பயணிகள் எதிர்பார்த்து இருந்த வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது பயணிகள் தாங்கள் விரும்பும் சீட்டுகளை பஸ்களில் தேர்வு செய்வதுபோல ரயில்களிலும் இனி தேர்வு செய்து, முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நமக்கு தேவையான ஸ்லீப்பர் சீட்களை அதைப் பார்த்து புக் செய்துகொள்ளலாம். இந்த வசதியை அமலுக்கு கொண்டு வருவதற்கு தேவையான டெக்னிக்கல் விஷயங்களை ரயில்வே தற்போது மேற்கொண்டு வருகிறதாம்.இதனால் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி எழுந்துள்ளது.