1. Home
  2. தமிழ்நாடு

கிரிவலம் செல்வோருக்கு குட் நியூஸ்..! நாளை முதல் சென்னை - திருவண்ணாமலை ரயில் சேவை ஆரம்பம்..!

1

திருவண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் நலனுக்காகவே தென்னக ரயில்வே சென்னையிலிருந்து திருவண்ணமலைக்கு புதிய மெமு ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதாந்திர கிரிவலம், சிவராத்திரி, மஹா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி வேளைகளில் பக்தர்கள் சிரமமின்றி திருவண்ணாமலைக்கு சென்று வரலாம்.

மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மெமு உள்ளூர் இரவு 9.35 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடைகிறது. மே 2ம் தேதி முதல் வேலூரில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

இதேபோல், மே 3ம் தேதி முதல் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், அதிகாலை 5.40 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும். இந்த ரயில் பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒண்ணுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி சாலை, மடிமங்கலம் மற்றும் போளூர் ஆகிய ரயில் நிலையங்களில் இரு திசைகளிலும் நின்று செல்லும். வழக்கமான அட்டவணைப்படி வேலூரில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

Trending News

Latest News

You May Like