இளைஞர்களுக்கு குட் நியூஸ்..! தமிழகத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்..!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் நாளை (அக். 28)வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த முகாமில் 150க்கு மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 15000க்கு மேற்பட்டகாலிப்பணியிடங்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய இருக்கிறது. மேலும் இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ தொழிற்கல்வி, பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்தை நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 044-24615160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.