1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்களுக்கு நற்செய்தி.. இனி, இரவு 10 மணி வரை தடுப்பூசி.. அரசு அறிவுறுத்தல்..!

பொதுமக்களுக்கு நற்செய்தி.. இனி, இரவு 10 மணி வரை தடுப்பூசி.. அரசு அறிவுறுத்தல்..!


இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 60 வயதைக் கடந்தவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் தடுப்பூசி எனும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (10ம் தேதி) நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே, 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த வாரம் முதல் நடைபெறுவதால் தடுப்பூசி மையங்களில் கூட்டம் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில் கூடுதல் செயலர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்களில் காலக்கெடு எதுவும் மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு வழங்கவில்லை.

தேவைக்கு ஏற்ப, தடுப்பூசி மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை மக்களுக்கு அரசு செலுத்தலாம். இந்த அடிப்படையில், இனி இரவு 10 மணி வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். தடுப்பூசி மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like