சேலம் மக்களுக்கு குட் நியூஸ்..! மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை-சேலம் விமான சேவை தொடங்கியது..!

இந்தியாவில் உதான் திட்டத்தின் கீழ் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் நகரங்களை தவிர்த்து பிற விமான நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த விமான சேவை வாயிலாக நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் பயனடைந்து வந்தனர். இதற்கிடையில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக சென்னை டூ சேலம் இடையேயான விமான சேவையை நிறுத்தபட்டது.
இதனிடையே சென்னை – சேலம் இடையேயான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் தினசரி சேவையை தொடங்க முன்வந்துள்ளது. சென்னையில் இருந்து காலை 11.20க்கு புறப்படும் விமானம் பகல் 12.30க்கு சேலம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் 16ம் தேதி பெங்களூரு-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் முதல்கட்டமாக விமான சேவை இயக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை - சேலம் இடையிலான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது