1. Home
  2. தமிழ்நாடு

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..! கோவை வழியாக திருப்பதிக்கு சிறப்பு ரயில் இயக்கம்..!

1

கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டி எண்17421 திருப்பதி-கொல்லம் எக்ஸ்பிரஸ் வருகிற 15 -ந் தேதி திருப்பதியில் இருந்து மதியம் 2 மணி 40 நிமிடங்களுக்கு புறப்படும். சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு இரவு 10 மணி 12 நிமிடங்களுக்கு வந்து சேரும். இதனைத்தொடர்ந்து பாலக்காடு, திரிச்சூர், அலுவா, எர்னாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், மாவெலிக்கரா, காயன்குளம் வழியாக கொள்ளத்திற்கு அடுத்த நாள் காலை 6 மணி 20 நிமிடங்களுக்கு செல்லும், இந்த ரயிலானது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும்.

இதேபோல் கொல்லத்தில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வண்டி எண் 17422 கோவை ரயில் நிலையத்துக்கு மாலை 6 மணி 32 நிமிடங்களுக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து கிளம்பி திருப்பதி ரயில் நிலையத்துக்கு அடுத்த நாள் விடியற்காலை 3 மணி 20 நிமிடங்களுக்கு செல்லும்.

Trending News

Latest News

You May Like