சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. தீவுத்திடலில் வரும் ஜனவரி முதல் பொருட்காட்சி தொடக்கம்..!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. தீவுத்திடலில் வரும் ஜனவரி முதல் பொருட்காட்சி தொடக்கம்..!

சென்னை தீவுத்திடலில் ஜனவரி மாதம் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சார்பில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக 70 நாட்கள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்படவுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வரும் ஜனவரியில் இது நடைபெறுகிறது. பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், ராட்டினம் போன்ற சிறப்பு அம்சங்களும் இடம் பெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சியில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 35, சிறுவர்களுக்கு ரூ 20, மாணவர்களுக்கு ரூ 20 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story