1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..! விரைவில் பொத்தேரி ரயில் பெட்டி உணவகம் ஆரம்பம் ..!

1

தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச்சில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரீமியம் பார்க்கிங் பகுதியில் ரயில் பெட்டி உணவகம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் திறக்கப்பட்டது. இந்தஉணவகத்துக்கு பயணிகள்மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி சாலையில் பொத்தேரி ரயில் நிலையத்தை ஒட்டி புதியதாக ரயில் பெட்டி உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்த உணவகத்தில் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்னை நோக்கி பயணிக்கும் பயணிகள் ஏராளமான உணவு வகைகளை ருசிக்கலாம். அதிலும் குறிப்பாக இத்தாலிய உணவுகள், ஆசிய உணவுகள் மற்றும் சீன உணவுகள் என விதவிதமான உணவுகள் தயார் நிலையில் இருக்குமாம்.

பொத்தேரி ரயில் நிலையத்திற்கு வெளியே ரயில் பெட்டி போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகமானது வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி ஜிஎஸ்டி சாலையின் ஓரத்தில் இந்த ரயில் பெட்டி உணவகம் அமைந்துள்ளதால் அதை கடந்து செல்லும் பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மேலும் இந்த உணவகத்தில் பழமையை நினைவு கூறும் விதமாக பயணிகள் அமர்ந்து சாப்பிட மரங்களால் செய்யப்பட்ட பெஞ்சுக்களும். கிரைனைட் டேபிள்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பொத்தேரி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இங்குவரும் பயணிகளையும் கவரும் விதமாக, இந்த ரயில் பெட்டி உணவகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News

Latest News

You May Like