1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..! மே முதல் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்..!

1

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இதனால் ரெயில் நிலையம் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like