சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..! செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா..!
சென்னையின் முக்கிய இடமான செம்மொழி பூங்காவில் இன்று ‘ஊரும் உணவும்’ பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை திமுக எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோர் தொடங்கி வைத்த நிலையில், கனிமொழி ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட வேண்டும் என்று புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அரங்கை சுற்றி பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி, ” செம்மொழி பூங்காவில் இன்று சிறப்பாக நடைபெற்று வரும் ‘ஊரும் உணவும்’ உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம் நம் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே ஆகும்.
சொல்லப்போனால் இப்பொழுது வரை எல்லா விஷயத்திலும் இந்தியா வந்த மக்கள் சில சவால்களை சந்தித்து தான் வருகிறார்கள். அதுமட்டுமின்றி மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராடி வருகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. குறிப்பாக இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.