1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..! இன்று முதல் 2 ஆயிரம் பஸ் பாஸ் அறிமுகம்!

Q

சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்தை தாண்டி மக்கள் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை அரசு செய்து வருகிறது. மின்சார ரயில் போக்குவரத்து ரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து ரத்து போன்ற சமயங்களில் கூடுதல் பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும்.
இந்நிலையில் தினசரி பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வரும் மக்கள் மாதாந்திர பயணச்சீட்டு வாங்கியும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையில் அதாவது தற்போது உள்ள பஸ்பாசில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி இருப்பதால் மக்கள் அனைவரும் ஏசி பேருந்துகளில் பயணம் செயய் ஆர்வம் காட்டுவர்.
இதன் காரணமாக விரைவில் அனைத்து பேருந்துகளிலும் செல்லும் வகையில் பஸ் பாஸானது அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ.2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்களாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர சலுகைப்பயணச்சீட்டு விற்பனை மையங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடையாறு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓடி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி, அயனாவரம், பிராட்வே, கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம், கிண்டி தொழிற்பேட்டை, ஐயப்பன் தாங்கல், கிளாம்பாக்கம், கேகே நகர், எம் கே பி நகர், மந்தவெளி, பல்லாவரம், பெரம்பூர், பூந்தமல்லி, செங்குன்றம், சைதாப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், திநகர், தாம்பரம் மேற்கு, திருவான்மியூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வடபழனி, வள்ளலார் நகர் மின்ட் , வேளச்சேரி, ஐசிஎப். இந்த இடங்களில் மாதாந்திர பேருந்து பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like